தேவையானவை:
- முழு உளுத்தம்பருப்பு,
- கருப்பு கொண்டைக்கடலை,
- காராமணி தலா ஒரு கப்,
- தனியாதூள் 2 அல்லது 3 டீஸ்பூன்,
- கரம் மசாலாதூள் ஒரு டீஸ்பூன்,
- கிராம்பு 5,
- பிரிஞ்சி இலை 2 (சிறியது),
- பட்டை சிறியதாக 4 துண்டுகள்,
- எண்ணெய் தேவையான அளவு,
- உப்பு ருசிக்கேற்ப,
- பொடியாக நறுக்கிய பூண்டு ஒரு டீஸ்பூன்,
- பெரிய வெங்காயம் பாதி,
- பெருங்காயத்தூள் அரை டீஸ்பூன்,
- பச்சை மிளகாய் 3,
- மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை.
செய்முறை: தானியங்களை முதல்நாள் இரவு ஊறவைக்கவும். வெங்காயத்தை பொடியாக நறுக்கவும். குக்கரில் எல்லா தானியங்களையும் வேகவிடவும். ரொம்பவும் குழைந்துவிட வேண்டாம். வெந்த பிறகு இதில் பிரிஞ்சி இலை, கரம் மசாலாதூள், மஞ்சள்தூள், தனியாதூள், பெருங்காயத்தூள், தேவையான உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, பச்சை மிளகாய், கிராம்பு, பட்டை, வெங்காயம் சேர்த்து வதக்கவும். வெந்த பருப்புகளை இதில் சேர்த்து மேலும் 5 நிமிடம் கிளறவும்.