தேவையானவை:
- புளி எலுமிச்சம்பழ அளவு,
- உப்பு ஒரு டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள் கால் டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் கால் டீஸ்பூன்.
தாளிக்க:
- எண்ணெய் கால் டீஸ்பூன்,
- கடுகு கால் டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் 3.
செய்முறை: புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கரைத்து வடிகட்டி உப்பு, மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும். பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கி வைக்கவும். மிளகாயை சிறு சிறு துண்டுகளாகக் கிள்ளி கடுகுடன் சேர்த்து தாளித்து ரசத்தில் சேர்க்கவும். ஐந்தே நிமிடத் தில் செய்யும் அசத்தலான ரசம் இது.