தேவையானவை:
- வெள்ளை கொண்டைக்கடலை ஒரு கப்,
- பச்சை மிளகாய் 3 அல்லது 4,
- இஞ்சி துருவல் ஒரு டீஸ்பூன்,
- தேங்காய் துருவல் 3 டீஸ்பூன்,
- உப்பு ருசிக்கேற்ப,
- எலுமிச்சம்பழச் சாறு அல்லது ஆம்சூர் தூள் 3 டீஸ்பூன்,
- எண்ணெய் தேவையான அளவு, மல்லித்தழை சிறிதளவு.
செய்முறை: தேங்காய் துருவலை மிக்ஸியில் (தண்ணீர் சேர்க்காமல்) தூளாக்கவும். கடலையை முந்தின நாள் இரவே ஊறவைக்கவும். ஊற வைத்த கடலையை எடுத்து பச்சை மிளகாயை இஞ்சியுடன் சேர்த்து கரகரப்பாக அரைக்கவும். பிறகு உப்பு, எலுமிச்சம்பழச் சாறு, தேங்காய் தூள் சேர்க்கவும். கடுகு தாளித்து, அரைத்த கலவையை இதில் கொட்டி, 5 நிமிடம் கொதிக்க விடவும். காரம் அதிகமாக தேவையானால் காய்ந்த மிளகாய் 2 சேர்க்கவும். நறுக்கிய மல்லித்தழை தூவி பரிமாறவும்.