தேவையானவை:
- சேப்பங்கிழங்கு கால் கிலோ,
- கார்ன்ஃப்ளார் 2 டீஸ்பூன்,
- உப்பு, எண்ணெய் தேவையான அளவு.
அரைக்க:
- மிளகு அரை டீஸ்பூன்,
- சோம்பு அரை டீஸ்பூன்,
- பூண்டு 5 பல்,
- இஞ்சி ஒரு துண்டு,
- பட்டை 1.
செய்முறை: அரைக்கக் கொடுத்துள்ளவற்றை நைஸாக அரைத்துக்கொள்ளுங்கள். சேப்பங்கிழங்கை குழைந்துவிடாமல் வேகவைத்து, தோல் உரித்து நீளவாக்கில் இரண்டாக நறுக்குங்கள். அரைத்த மசாலா, உப்பு, கார்ன்ஃப்ளார் ஆகியவற்றை கிழங்கில் சேர்த்துப் பிசறி, காயும் எண்ணெயில் போட்டு, பொன்னிறமாகப் பொரித்தெடுங்கள்.
சேனைக்கிழங்கு மிக்சர் தேவையானவை:
- சேனைக்கிழங்கு கால் கிலோ,
- பொட்டுக்கடலை 3 டீஸ்பூன்,
- வறுத்த வேர்க்கடலை ஒரு பிடி,
- மிளகாய்தூள் கால் டீஸ்பூன்,
- மஞ்சள்தூள் ஒரு சிட்டிகை,
- உப்பு அரை டீஸ்பூன்,
- எண்ணெய் பொரிக்க தேவையான அளவு,
- கறிவேப்பிலை ஒரு கைப்பிடி.
செய்முறை: சேனைக்கிழங்கை நன்கு மண் போகக் கழுவி, கடலைப்பருப்பு அளவுக்கு சிறு சிறு சதுரங்களாக வெட்டிக்கொள்ளுங்கள். மஞ்சள்தூள், உப்பு போட்டு தண்ணீர் சேர்த்து அடுப்பில் வையுங்கள். ஒரு கொதி வந்ததும், இறக்கி தண்ணீரை வடித்துவிடுங்கள். எண்ணெயைக் காயவைத்து, கிழங்கைப் போட்டு மொறுமொறுவெனப் பொரித்தெடுங்கள். கறிவேப்பிலையையும் போட்டுப் பொரித்து அள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில், பொரித்த கிழங்கு, பொட்டுக்கடலை, வறுத்த வேர்க்கடலை, மிளகாய்தூள் போட்டு நன்கு கலந்துவையுங்கள். கொரிப்பதற்குக் கிடைத்துவிட்டது காரமான கரகர மிக்சர்