...

சேமியா கிச்சடி

தேவையானவை: சேமியா & 1 கப், பொடியாக நறுக்கிய காய்கறிக் கலவை (கேரட், பீன்ஸ், பட்டாணி) & 1 கப், பெரிய வெங்காயம் & 2, தக்காளி & 2, பச்சை மிளகாய் & 5, மஞ்சள்தூள் & கால் டீஸ்பூன், எண்ணெய் & 1 டீஸ்பூன், நெய் & 2 டீஸ்பூன், உப்பு & ருசிக்கு.

தாளிக்க: கடுகு & 1 டீஸ்பூன், உளுத்தம்பருப்பு & 2 டீஸ்பூன், கடலைப்பருப்பு & 2 டீஸ்பூன், கறிவேப்பிலை & சிறிது. செய்முறை: சேமியாவை 1 டீஸ்பூன் நெய்யில் வறுத்தெடுங்கள். மீதமுள்ள நெய், எண்ணெயைக் காய வைத்து தாளிக்கும் பொருட்களை சேருங்கள். பொன்னிறமானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், கீறிய மிளகாய் சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள். பின்னர் காய்கறி, தக்காளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து காய்கறி வேகும் வரை வதக்குங்கள். அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து, கொதித்ததும் சேமியாவை சேர்த்து, பெரிய தீயில் 2 நிமிடம் வைத்து தீயைக் குறைத்து மூடி போட்டு 5 நிமிடம் வேக விட்டு எடுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.