...

சேமியா பாயசம்

தேவையானவை: சேமியா & அரை கப், பால் & 2 கப், பொடியாக நறுக்கிய முந்திரி & 10, ஏலக்காய்தூள் & அரை டீஸ்பூன், நெய் & 1 டேபிள்ஸ்பூன், சர்க்கரை & முக்கால் கப். அரைக்க: தேங்காய் துருவல் & 1 டேபிள்ஸ்பூன், முந்திரிப்பருப்பு & 6.

செய்முறை: சேமியாவை ஒன்றரை கப் கொதிக்கும் நீரில் நன்கு வேகவிடுங்கள். வெந்ததும் சர்க்கரை, பால், அரைத்த விழுது சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள். நெய்யில் முந்திரியை வறுத்து சேர்த்து, ஏலக்காய்தூளும் சேர்த்து கிளறி பரிமாறுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.