...

நெய் பருப்பு மசியல்

தேவையானவை:

  • துவரம்பருப்பு  ஒரு கப்,
  • பாசிப்பருப்பு  கால் கப்,
  • தக்காளி  2,
  • பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன்,
  • உப்பு  ருசிக்கேற்ப,
  • மிளகாய்தூள்  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • சாம்பார்தூள்  ஒன்றரை டேபிள்ஸ்பூன்,
  • நெய்  2 டேபிள்ஸ்பூன்,
  • சீரகம்  ஒரு டீஸ்பூன்,
  • மஞ்சள்தூள்  ஒரு டீஸ்பூன்.

செய்முறை: தக்காளியைப் பொடியாக நறுக்கவும். 2 பருப்புகளையும் குக்கரில் குழைய வேகவிடவும். ஒரு கடாயில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு, வெடித்ததும் தக்காளி துண்டுகள், மிளகாய்தூள், பெருங்காயம், சாம்பார்தூள் போட்டு நன்றாகக் கிளறவும். 2 நிமிடத்துக்குப் பிறகு உப்பு போடவும். கடைசியில் வெந்த பருப்பைப் போட்டு கொஞ்ச நேரம் கொதிக்க விடவும். இந்த ‘தாலை’ விரைவாகவும் சுலபமாகவும் செய்யலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Seraphinite AcceleratorOptimized by Seraphinite Accelerator
Turns on site high speed to be attractive for people and search engines.