தேவையானவை:
- பாசிப்பருப்பு ஒரு கப்,
- பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம் அரை கப்,
- தக்காளி 1 அல்லது 2,
- எண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்,
- பூண்டு 3 பல்,
- பச்சை மிளகாய் 3,
- மிளகாய்தூள் ஒரு டீஸ்பூன்,
- உப்பு ருசிக்கேற்ப.
செய்முறை: தக்காளி, பச்சை மிளகாயை நறுக்கவும். பருப்பை, உப்பு சேர்த்து பூண்டுடன் வேகவிடவும். கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து, மிளகாய் பொடி தூவி மேலும் 2 நிமிடம் வதக்கவும். சிறிது நேரம் கழித்து, வெந்த பயத்தம் பருப்பை சேர்த்து, தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து, 2 கொதி கொதிக்கவிடவும். கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும். சப்பாத்தியுடன் சாப்பிட அருமையாக இருக்கும்.