தேவையானவை:
- பழைய புளி சிறிய எலுமிச்சம்பழ அளவு,
- உப்பு ஒரு டீஸ்பூன்.
ரசப்பொடிக்கு:
- மிளகு 2 டீஸ்பூன்,
- துவரம்பருப்பு ஒரு டீஸ்பூன்,
- சீரகம் அரை டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் (சிறியது) 1,
- கட்டிப் பெருங்காயம் சிறு துண்டு,
- நெய் கால் டீஸ்பூன்.
தாளிக்க: நெய் கால் டீஸ்பூன், கடுகு கால் டீஸ்பூன், கறிவேப்பிலை சிறிது.
செய்முறை: பொடிக்கக் கொடுத்தவற்றை கால் டீஸ்பூன் நெய்விட்டு வறுத்துப் பொடித்துக் கொள்ளவும். புளியையும் உப்பையும் தனித்தனியாக வாணலியில் வறுத்துக் கொள்ளவும். புளியை 2 கப் நீர்விட்டு கரைத்து வடிகட்டி, உப்பையும் போட்டு கொதிக்க விடவும். பின்னர் பொடியைப் போட்டு கொதித்ததும் இறக்கி நெய்யில் கடுகு, கறிவேப்பிலை இரண்டையும் தாளித்துக் கொட்டவும். குழந்தை பெற்ற பெண்களுக்கு வைத்துக் கொடுக்கும் ரசம் இது.