பூரி தால்

தேவையானவை:

  • கோதுமைமாவு அல்லது மைதாமாவு  ஒரு கப்,
  • உப்பு  ருசிக்கேற்ப,
  • துவரம்பருப்பு  ஒரு கப்,
  • பச்சை மிளகாய்  4,
  • பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன்,
  • காய்ந்த மிளகாய் (காரம் தேவைப்பட்டால்)  2,
  • கடுகு  ஒரு டீஸ்பூன்,
  • எண்ணெய் அல்லது நெய்  தேவையான அளவு,
  • கறிவேப்பிலை  சிறிதளவு,
  • மஞ்சள்தூள்  1 சிட்டிகை.

செய்முறை: பச்சை மிளகாயை துண்டுகளாக நறுக்கவும். துவரம்பருப்புடன், பச்சை மிளகாய், மஞ்சள்தூள் சேர்த்து வேகவிடவும். ஆறினபிறகு எண்ணெய் அல்லது நெய்யில் கடுகு, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய், பெருங்காயம், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும். கோதுமை மாவை சப்பாத்தி மாவு பதத்தில் பிசையவும். அதில் சப்பாத்திகளாக இட்டு, சிறிய மூடியால் வெட்டி, குட்டி குட்டி பூரிகளாக செய்து, எண்ணெயில் பொரித்துக்கொள்ளவும். ரொம்பவும் சிவந்துவிடாமல், வெள்ளையாக இருக்கும்போதே எடுக்கவேண்டும். பருப்பு மசியலில் இந்த பூரிகளை நனைத்து சாப்பிடவும். குழந்தைகளுக்கான அட்டகாசமான அயிட்டம் இது. குறிப்பு: காய்கறி சேர்க்க வேண்டுமென்றால் பருப்புடன் ஏதாவது ஒரு காயையும் சேர்த்து வேக வைத்துக்கொள்ளவும். பருப்பு சற்று தளர்த்தியாக இருக்க வேண்டும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

X