வாதநாராயண இலை ரசம்

தேவையானவை:

  • புளி  எலுமிச்சை அளவு,
  • உப்பு  ஒரு டேபிள்ஸ்பூன்,
  • வாதநாராயண இலை  கால் கப்,
  • பூண்டு  4 பல்,
  • பெருங்காயத்தூள்  கால் டீஸ்பூன்,
  • எண்ணெய்  கால் டீஸ்பூன்.

ரசப்பொடிக்கு:

  • தனியா  2 டீஸ்பூன்,
  • கடலைப்பருப்பு  ஒரு டீஸ்பூன்,
  • மிளகு  ஒரு டீஸ்பூன்,
  • சீரகம்  கால் டீஸ்பூன்,
  • முழு உளுத்தம்பருப்பு  ஒரு டீஸ்பூன்,
  • காய்ந்த மிளகாய்  3.

தாளிக்க:

  • நெய்  கால் டீஸ்பூன்,
  • கடுகு  கால் டீஸ்பூன்,
  • கறிவேப்பிலை  சிறிது (தேவைப்படுபவர்கள் ஒரு தக்காளி சேர்த்துக்கொள்ளலாம்).

செய்முறை: புளியை இரண்டு கப் தண்ணீர் விட்டு நன்றாகக் கரைத்து வடிகட்டி வைத்துக்கொள்ளவும். அத்துடன் உப்பு சேர்த்து அடுப்பில் வைத்து நன்கு கொதிக்க வைக்கவும். பொடி தயாரிக்க தேவையான பொருட்கள் அனைத்தையும் கால் டீஸ்பூன் எண்ணெயில் வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும். ரசம் கொதித்து வந்தவுடன் இந்தப் பொடியைப் போட்டு அதனுடன் பூண்டையும் தட்டிப் போட்டு, பெருங்காயத்தூளையும் போடவும். நெய்யில் கடுகு தாளித்து வாதநாராயண இலையை போட்டு வதக்கி ரசத்தில் கொட்டவும் (அல்லது, இலையை பூண்டோடு சேர்த்து வதக்கி அரைத்தும் போடலாம்). இறுதியாக கறிவேப்பிலை சிறிது போட்டு இறக்கி வைத்து விட்டால் வாதநாராயண இலை ரசம் ரெடி. வாதம், பித்தம் போன்றவற்றால் அவதிப்படுபவர்கள் இந்த ரசத்தைச் சாப்பிட்டால் நோய் பறந்தோடி விடும்.