தேவையானவை:
- துவரம் பருப்பு ஒரு கப்,
- உருளைக் கிழங்கு 1,
- தக்காளி 1,
- கறிவேப்பிலை சிறிதளவு,
- மிளகுத்தூள் 2 டீஸ்பூன்,
- உப்பு ருசிக்கேற்ப.
தாளிக்க: கடுகு, சீரகம், எண்ணெய் சிறிதளவு.
செய்முறை: உருளைக்கிழங்கைத் தோல் சீவி, பொடியாக நறுக்கவும். தக்காளியைப் பொடியாக நறுக்கவும். பருப்புடன் தக்காளி, உருளைக்கிழங்கு துண்டுகளை சேர்த்து, சிறிது மஞ்சள்தூள் சேர்த்து வேகவைக்கவும். மிளகுத்தூள், உப்பு சேர்க்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, சீரகம் போட்டு தாளித்து, பருப்பு கலவையில் கொட்டவும்.