தேவையானவை:
- கருப்பு உளுந்து அரை கப்,
- வெள்ளை கொண்டைக்கடலை கால் கப்,
- ரெட் பீன்ஸ் கால் கப்,
- மிளகாய்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்,
- மல்லித்தழை கால் கப்,
- வெண்ணெய் 3 டேபிள்ஸ்பூன்,
- பெரிய வெங்காயம் 2,
- தக்காளி 3,
- பூண்டு 10 பல்,
- பச்சை மிளகாய் 3,
- சீரகத்தூள் ஒரு டேபிள்ஸ்பூன்,
- எண்ணெய் 4 டேபிள்ஸ்பூன்,
- உப்பு ருசிக்கேற்ப.
செய்முறை: பயறு வகைகளை 6 மணி நேரம் ஊறவைக்கவும். வெங்காயம், தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய், மல்லித்தழை ஆகியவற்றை பொடியாக நறுக்கவும். பிறகு குக்கரில் பயறுகளை வேகவிடவும். கடாயில் எண்ணெய் விட்டு, அதில் பொடியாக நறுக்கிய பூண்டை போட்டு வதக்கவும். நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து, வெங்காயம் பொன்னிறமாக மாறும் வரை வதக்கவும். மிளகாய்தூளும், சீரகத்தூளும் சேர்க்கவும். தக்காளி துண்டுகளை சேர்க்கவும். வெந்த பருப்புகளை சேர்த்து, வெண்ணெயையும் சேர்த்து மேலும் ஒரு 5 நிமிடம் கிளறவும். மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.